இலங்கை

போதைப்பொருளை ஒழிப்பதற்கு தேசிய ஒருமைப்பாடு அவசியம் – ஜனாதிபதி

Published

on

போதைப்பொருளை ஒழிப்பதற்கு தேசிய ஒருமைப்பாடு அவசியம் – ஜனாதிபதி

எதிர்கால சந்ததியினரின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், தேசிய பேரழிவாகவும் மாறியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய தேசியத் தேவையை ஜனாதிபதி ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு வலியுறுத்தினார். 

 இலங்கையிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (23) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டு இதனை தெரிவித்தார். 

Advertisement

 இதன்போது, இந்த விடயத்தில் எவ்வித விவாதத்திற்கும் இடமில்லை எனவும், இந்த தேசியப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இதுகுறித்து சமூகத்தில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

 அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களையும் இந்த முயற்சிக்கு பங்களிக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version