சினிமா
போர் வீரனாக காட்சியளிக்கும் பிரபாஸ்.. வெளியானது புதிய பட போஸ்டர்.! குஷியில் ரசிகர்கள்
போர் வீரனாக காட்சியளிக்கும் பிரபாஸ்.. வெளியானது புதிய பட போஸ்டர்.! குஷியில் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவின் பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்துவரும் புதிய படம் குறித்து ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், “சீதாராமன்” போன்ற காதல்-வரலாற்று படத்தின் மூலம் பெரும் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் ஹனு ராகவபுடி தான் இந்தப் படத்தையும் இயக்குகின்றார். இந்த பிரம்மாண்டமான புதிய படத்துக்கு இன்று அதிகாரபூர்வமாக ‘ஃபௌசி (Fauzi)’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தை சூடேற்றிவருகிறது.போஸ்டரில் பிரபாஸ் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படம் வரலாறு சம்மந்தப்பட்ட கதையாக இருக்கும் என ஊகிக்கின்றனர். மேலும் பிரபாஸ் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் #Fauzi, #PrabhasHanuRaghavapudi போன்ற ஹாஷ்டாக்குகளுடன் போஸ்டரை பகிர்ந்து வருகிறார்கள். சில மணி நேரங்களுக்குள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் போஸ்டர் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.