இலங்கை
மட்டக்களப்பை பந்தாடிய மினி சூறாவளி ; வேரோடு சாய்ந்த மரங்கள்; வீடுகளுக்கு சேதம்!
மட்டக்களப்பை பந்தாடிய மினி சூறாவளி ; வேரோடு சாய்ந்த மரங்கள்; வீடுகளுக்கு சேதம்!
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று (24) வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பருவ மழை ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென வீசிய மினி சூறாவளியால் தற்போது மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.
அதேவேளை பலத்த மழை மற்று கடும் காற்று தொடர்பில் நாடு முழுவது 24 மணி நேர எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.