சினிமா

மோகன்லால் யானைத் தந்தம் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம்! நடந்தது என்ன?

Published

on

மோகன்லால் யானைத் தந்தம் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம்! நடந்தது என்ன?

மலையாளத் திரைப்பட உலகின் லெஜண்ட் நடிகரான மோகன்லால் தொடர்பான யானைத் தந்த வழக்கு மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கில், தற்போது கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.நீதிமன்றம், கேரள அரசு 2016ஆம் ஆண்டு மோகன்லாலுக்கு வழங்கிய யானைத் தந்த உரிமம் (ownership certificate) செல்லாது என்று அறிவித்து அதை ரத்து செய்துள்ளது.இந்த தீர்ப்பு தற்போது கேரள அரசியல் வட்டாரங்களிலும், திரைப்பட ரசிகர்களிடையிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.2011ம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி, வருமான வரி அதிகாரிகள் கேரள மாநிலம் கொச்சியின் தேவாரா பகுதியில் அமைந்திருந்த நடிகர் மோகன்லாலின் இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர்.அந்த சோதனையின் போது, அதிகாரிகள் அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானைத் தந்தங்களை கண்டுபிடித்தனர்.அந்த நேரத்தில், மோகன்லால் அவற்றை சட்டப்படி பதிவு செய்திருந்தாரா என வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் தேவையான அனுமதி ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது.இதனால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மோகன்லாலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். பின்னர், மோகன்லால், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து 2016ம் ஆண்டு மீண்டும் யானைத் தந்தங்கள் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. அதே சமயத்தில், ஜேம்ஸ் மேத்யூ என்ற நபர், இந்த அனுமதி சட்டப்படி தவறானது எனக் கூறி மோகன்லாலுக்கு  எதிராக மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று மோகன்லாலிடம் உள்ள யானைத் தந்தங்களுக்கு, கேரள அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version