இலங்கை

யாழில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை; இரு குடும்பங்களுக்கு பாதிப்பு

Published

on

யாழில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை; இரு குடும்பங்களுக்கு பாதிப்பு

  நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/45 கிராம சேவகர் பிரிவில் பலத்த காற்று காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களை சேர்ந்த அறுவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

அதெவேளை கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்தது.

கடும் காற்றுக் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல், தோப்பூர், பாட்டாளிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டிருந்தது.

மேலும் மட்டக்கள்ப்பில் வீசிய மினி சுறாவளியால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

Advertisement

இதனால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version