இலங்கை

லொக்கு பெட்டி, ஷாமன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Published

on

லொக்கு பெட்டி, ஷாமன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

போதைப்பொருள் கடத்தல்காரர் “லொக்கு பெட்டி” மற்றும் அவருக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட ஷாமன் ஆகியோரை ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை காவலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Advertisement

இன்றைய வழக்கு விசாரணையின்போது லொக்கு பெட்டி ஸும் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதே நேரத்தில் தினேஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட ஷாமன் நேரில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது குறித்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement

அத்துடன், போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்ட நிதி ஷாமனின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version