இலங்கை
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம்!
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம்!
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஊடகக் கழகத்தின் ஏற்பாட்டில், லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் இன்றையதினம் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவமனையின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டதுடன் இரத்ததான முகாமில் ஆசிரியர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் என அனைவரும் இணைந்து குருதிக் கொடையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.