இலங்கை
வன்முறைகளில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது; போதைப்பொருள்களும் மீட்பு
வன்முறைகளில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது; போதைப்பொருள்களும் மீட்பு
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக வன்முறையில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த இருவர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸா ருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 12கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவர் தன்னை விடுவிப்பதற்காக பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்றும் எனினும் பொலிஸார் அதனை ஏற்காது அவரைக் கைது செய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.