பொழுதுபோக்கு
40 வயதிலும் சிங்கிள், ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங்; போக்கிரி பட நடிகை ஓபன் டாக்!
40 வயதிலும் சிங்கிள், ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங்; போக்கிரி பட நடிகை ஓபன் டாக்!
ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங்கில் இருந்தேன். ஆனால் இப்போது யாருடனும் தொடர்பில் இல்லை. எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறது என்று பிரபல கவர்ச்சி நடிகை முமைத்கான் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி அசத்தியவர் தான் முமைத் கான். குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் சிக்கி முக்கி நெருப்பே, கந்தசாமி படத்தில் என்பேரு மீனா குமாரி, போக்கிரி படத்தில் என் என் செல்லம் பேரு ஆப்பிள் உள்ளிட்ட பாடல்கள் முமைத் கானுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்த படங்களாக இன்றுவரை நிலைத்திருக்கிறது,2001-ம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளியான மஜ்னு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முமைத் கான் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். அதன்பிறகு பாய்ஸ், தலைநகரம், மருதமலை, வில்லு, சிறுத்தை உள்ளிட்ட படங்களில் பாடலுக்கு நடனமாடிய இவர், பிரஷாந்த் நடிப்பில் வெளியான மம்பட்டியான் படத்தில் சொர்ணம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பெங்காலி ஒடியா உள்ளிட்ட மொழிகளில் தலா ஒரு படத்தில் ஆடியுள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்த முமைத்கான், 49 நாட்கள் வீட்டில் இருந்து 8-வது இடம் பிடித்தார். அதன்பிறகு 2018-ம் ஆண்டு கெஸ்டாக என்ட்ரி கொடுத்திருந்தார். கடைசியாக ஜான்சி என்ற வெப் தொடரில் நடித்திருந்த முமைத் கான், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்ததாக தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர், எனக்கு சமீபத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு நான் குணமடைந்து விட்டேன். கடந்த காலத்தில் 4 பேருடன் டேட்டிங் செய்தேன். ஆனால் அவர்களை விட்டு பிரிந்து விட்டேன். தற்போது அவர்கள் யாருடனும் நான் தொடர்பு இல்லை இப்போது தனியாக ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எதிர்காலத்தில் திருமண வாய்ப்பு வந்தால் திருமணம் செய்து கொள்வேன். என்று கூறியுள்ளார்.