சினிமா

6 மாசத்துல எனக்கு நடக்கப்போற பயங்கரம்..கல்லறை கட்டி பூசிட்டாங்க!! ஷாக் கொடுத்த செல்வராகவன்..

Published

on

6 மாசத்துல எனக்கு நடக்கப்போற பயங்கரம்..கல்லறை கட்டி பூசிட்டாங்க!! ஷாக் கொடுத்த செல்வராகவன்..

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் செல்வராகவன் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், உங்களுக்கு நடந்த விஷயங்களில் மிகவும் கோபம் வந்தது என்றால் எதை சொல்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு செல்வராகவன், இன்னும் 6 மாசத்துல நடக்கப்போற பயங்கரம், அது வரும், எப்படி இத்தனை முறை உன்னாள் எழுந்து நிற்க முடிகிறது என்று நானே என்னை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கலை மீது எனக்கு இருக்கும் காதல்தான் காரணம் என நினைக்கிறேன்.என்னுடைய வேலை எனக்கு பிடித்திருக்கிறது, அது கொடுக்கும் வித்வேகம் எனக்கு திரும்ப எழச்செய்கிறது. கிட்டத்தட்ட எனக்கு கல்லறை கட்டி பூசி எல்லாம் வைத்துவிட்டார்கள். அதில் இருந்து ஒருவாரம் முன் தான் வெளியே வந்தேன். அது என்ன விஷயம் என்று இப்போது சொல்லமாட்டேன்.நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதில் தான் அது இருக்கு. என்னை பொறுத்தவரை என் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதுமாதிரி யோசிக்கும் போது எல்லாம் ஒன்னும் இல்லாதது போல் இருக்கும். சரி காயப்படுத்திவிட்டார்கள் என்ன செய்வது, பேண்டேஜ் போட்டு மீண்டும் வேலைக்கு போக வேண்டும்.அதுக்கு அழணும் என்றால் 5 வருஷம் கூட அழுதுட்டு போலாம், தாடி வளர்த்துட்டு. நாம் சரியாக தான் சொல்லியிருப்போம். இது வேண்டாம்டா இது வேலைக்கு ஆகாது, இந்த ரிலேஷன்ஷிப். நீங்கள் அதை செருப்பால் அடித்துவிட்டு வர்றீங்க..படுறீங்க என்று மறைமுகமாக ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version