இலங்கை

Lemmon வால் நட்சத்திரம் இலங்கையர்களும் காணலாம் ; இன்று வானில் நிகழவுள்ள அதிசயம்

Published

on

Lemmon வால் நட்சத்திரம் இலங்கையர்களும் காணலாம் ; இன்று வானில் நிகழவுள்ள அதிசயம்

 C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, இன்று(24) மாலை இலங்கையர்கள் காண முடியும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வால் நட்சத்திரம் ‘Lemmon’ (லெமன்) என்றும் அழைக்கப்படும்.

Advertisement

சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தென்படும்.

மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேல் கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemmon என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

அதேவேளை Lemmon வால் நட்சத்திரம் சுமார் 1,350 ஆண்டுகளுக்குப் பின்னர் நமது சூரிய மண்டலத்திற்குள் திரும்பி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version