சினிமா
அஜித் மார்பில் பகவதி அம்மன் டாட்டூ.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்
அஜித் மார்பில் பகவதி அம்மன் டாட்டூ.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்வர் நடிகர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் இறுதியாக குட் பேட் அக்லி படம் வெளியானது. இதைத்தொடர்ந்து அஜித் குமார் கார் ரேஸ் பந்தையங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படம் கமர்சியல் படமாக அமையும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆதிக் கூறியிருந்தார்.இந்த நிலையில், அஜித் குமார் குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அதில் அஜித் மேலாடை அணியாத நிலையில், அவருடைய மார்பின் வலது பக்கத்தில் பச்சை குத்தி கொண்டுள்ள போட்டோவும் இணையத்தில் அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. அந்த டாட்டூ அஜித்தின் குல தெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த டாட்டூ ஸ்டைல் அல்ல . அவரது இஷ்ட தெய்வம் பாலக்காடு அர்ச்சனை தெய்வம் என்று அறியப்படும் இந்த அம்மன் ஆலயத்திற்கு அஜித் அடிக்கடி தரிசனம் செய்து வருகின்றாராம். டாட்டூ சிலருக்கு அழகு, அது உறவு, நம்பிக்கை. தற்போது அஜித்தின் டாட்டூ வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .