பொழுதுபோக்கு
அப்பாவும், தாத்தாவும், தீவிரவாதிகள்; போலீஸ் ஆக துடிக்கும் பேரன்: விஜயின் இந்த படம் உங்களுக்கு தெரியுமா?
அப்பாவும், தாத்தாவும், தீவிரவாதிகள்; போலீஸ் ஆக துடிக்கும் பேரன்: விஜயின் இந்த படம் உங்களுக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். ஆனால் அவர் நடித்த பல படங்கள் இன்றும் பல்வேறு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. அந்த வகையில், விஜய் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் பட்டையை கிளப்பிய ஒரு படத்த பற்றி பார்க்கலாம்.இந்த படத்தில் அநியாயத்தை தட்டி கேட்டுக்கும் ஒரு துணிச்சலான இளைஞராக விஜய் நடித்திருப்பார். படத்தில் போலீஸ் ஆக வேண்டும் என்று விரும்பும் அவருக்கு, ஒரு அமைச்சரின் மகளை பாதுகாக்க வேண்டிய பணி கொடுக்கப்படுகிறது. கடைசியில் அந்த அமைச்சரின் மகளை கடத்தி கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பதே தனது அப்பாதான், அவருக்கு தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்று தெரியவரும்போது விஜய் என்ன செய்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.இந்த படத்தில் விஜயின் அப்பா, தாத்தா இருவரும் தீவிரவாதிகள். படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் அமைச்சரின் மகளை காப்பாற்ற அப்பாவையே கொன்றுவிடுவார் விஜய். அசுரன், அங்காடித்தெரு உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ள இயக்குனர் வெங்கடேஷன் இயக்கிய படம் தான் இது. படத்தின் பெயர் செல்வா. விஜய் நடிப்பில் தமிழன் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் மஜித் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருந்தார் ஏ.வெங்கடேஷ்.படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுவாதி நடித்திருந்த நிலையில், அமைச்சரின் மகள் காமினி கேரக்டரில், ரிவா என்பவர் நடித்திருந்தார். மேலும், விஜயின் வளர்ப்பு தந்தையாக நடிகர் ரகுவரன், விஜயின் தாத்தா கேரக்டரில், பிரபல நடிகர் ராஜன் பி தேவ் ஆகியோருடன், மணிவண்ணன், செந்தில், விசித்ரா, டைமன் பாபு, போண்டா மணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சிற்பி இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஜய் ஒரு காலனியில் வசிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.இதில் மணிவண்ணன் உள்ளிட்டோருடன் விஜய் செய்யும் காமெடி காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்ற காட்சிகளாக இன்றும் நிலைத்திருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில், குறிப்பாக ஜம்ப் செய்யும் காட்சகளில் டூப் பயன்படுத்தாமல் விஜய் ரிஸ்க் எடுத்து செய்ததாகவும் தகவல்கள் உள்ளது. விஜயின் திரை வாழ்க்கையில் வந்த வெற்றிப்படங்களில் செல்வாவும் என்று என்பது குறிப்பிடத்தக்கது.