இலங்கை
அரசின் திட்டமற்ற வாகன இறக்குமதி – பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்!
அரசின் திட்டமற்ற வாகன இறக்குமதி – பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்!
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள், சேவையில் இருந்து விலகும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நெரிசல் காரணமாக பேருந்துகளின் எரிபொருள் செலவு உயருவதுடன், ஒரு நாளைக்கு இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக , பேருந்து உரிமையாளர்கள் தொழிலில் இருந்து வெளியேறுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்