பொழுதுபோக்கு

இன்னும் நீங்க அந்த மாதிரி ஒரு படம் பண்ணல… கமலிடம் ரஜினி சொன்ன அந்த வார்த்தை; மனம் திறந்த இயக்குநர் பி.வாசு

Published

on

இன்னும் நீங்க அந்த மாதிரி ஒரு படம் பண்ணல… கமலிடம் ரஜினி சொன்ன அந்த வார்த்தை; மனம் திறந்த இயக்குநர் பி.வாசு

தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக தனது நடிப்பால் கோலோச்சி நிற்பவர் கமல்ஹாசன். உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் எவர்கீரின் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். எப்போதும் கமல் – மணிரத்னம் காம்போ ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு காம்போவாகும். கடந்த 1987-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம்  இயக்கத்தில் கமல் நடிப்பில்  வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் ‛நாயகன்’. மும்பையில் வாழ்ந்த தமிழகத்தை சேர்ந்த வரதராஜன் முதலியார் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகி இருந்தது. மும்பையில் தமிழ் டானாக வேலு நாயக்கராக கமல் நடித்திருந்தார். அவருடன் சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‛தென்பாண்டி சீமையில’, ’நீ ஒரு காதல் சங்கீதம்’ உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இன்றும் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இந்த பாடல்கள் உள்ளது.  கமலுக்கு சிறந்த நடிகர், பிசி ஸ்ரீராமுக்கு சிறந்த ஒளிப்பதிவு, தோட்டா தரணிக்கு சிறந்த கலை என இந்த படத்திற்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் கிடைத்தன. A post shared by மாண்புமிகு மக்கள் (@tamilpeople_offl)தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ’நாயகன்’ திரைப்படம் தொடர்பாக ரஜினி பேசியது குறித்து இயக்குநர் பி.வாசு மனம் திறந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பி.வாசு பேசியதாவது, “சந்திரமுகி படப்பிடிப்பின் போது நானும், ரஜினியும் வாக்கிங் போவோம். அப்போது ரஜினியிடம் நான் சொன்னேன் ‘நாயகன்’ படம் பார்த்து நான் பைத்தியம் ஆகிவிட்டேன் சார், இன்னும் நீங்க அந்த மாதிரி ஒரு படம் பண்ணல சார் என்றேன். அப்போது ரஜினி சொன்னார் நான் ‘நாயகன்’ பார்த்துவிட்டு கிளாஸை எடுத்து டங்கு டங்குனு அடித்தேன். எனக்கு போதை ஏறவில்லை. உடனே கமலுக்கு போன் செய்துவிட்டேன். கமல் மூன்று பெக்கை விட வேலு நாயக்கரின் போதை அதிகமாக இருக்கிறது என்று சொன்னேன்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version