பொழுதுபோக்கு

காதலியை நினைத்து ஒரு பாட்டு; எம்.ஜி.ஆருக்காக இருமுறை பாடிய டி.எம்.எஸ்: பாடல் இப்போவும் செம்ம ஹிட்டு!

Published

on

காதலியை நினைத்து ஒரு பாட்டு; எம்.ஜி.ஆருக்காக இருமுறை பாடிய டி.எம்.எஸ்: பாடல் இப்போவும் செம்ம ஹிட்டு!

எம்.ஜி.ஆர், நடிப்பில் வெளியான அன்பே வா திரைப்படத்தில் ஒரு பாடலை பாடிய டி.எம்.எஸ்., டேக் ஓகே என்று சொன்னவுடன், சென்றுவிட, மறுநாள் மீண்டும் அதே பாடலை ரீடேக் பாட சொல்லி தயாரிப்பாளர் ஏ.வி.எம். செட்டியார் சொன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து சென்சாருக்கு செல்லும் முன் எம்.ஜி.ஆருக்கு படம் ஸ்பெஷல் காட்சியாக திரைபிடப்பட்டுள்ளது. படம் பார்த்து வெளியில் வந்த எம்.ஜி.ஆர் இது எனக்கான படம் இல்லை. எம்.எஸ்.விக்காக எடுக்கப்பட்ட படம். மியூசிக் ரொம்ப நல்லாருக்கு என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்பட பாணியில் இருந்து விலகி புதிய கதையசத்துடன் எடுக்கப்பட்ட அன்பே வா இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் போற்றப்படுகிறது.இந்த படத்தில் இடம் பெற்ற ‘அன்பே வா’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு குரலாக இருந்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல், முதல் டேக்கிலேயே எம்.எஸ்.வி பாடல் பிரமாதமாக வந்துள்ளது என்று பாராட்டியுள்ளார். இதனால் சந்தோஷமாக அங்கிருந்த சென்ற டி.எம்.எஸ். மறுநாள் வரும்போது அதே பாடலை ரீ-டேக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர், என்ன என்று விசாரித்துள்ளார்.இந்த பாடலுக்கு என்ன ஆச்சு? எதற்காக ரீ-டேக் என்று எம்.எஸ்.வியிடம் கேட்க எனக்கும் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு தான் இந்த பாடல் எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியாக பாடுவது போல் டி.எம்.எஸ். பாடியுள்ளார். ஆனால் அவர் ஏக்கத்துடன் பாட வேண்டும் அதனால் பாடலை திரும்பவும் ரீ-டேக் எடுங்கள் என்று ஏ.வி.எம். செட்டியார் கூறியுள்ளார். அதன்பிறகு இந்த பாடல் ரீ-டேக் ஆக, முன்பைவிட பிரமாதமாக பாடி அசத்தியுள்ளார் டி.எம்.எஸ். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version