சினிமா

சில போட்டியாளர்களின் நடத்தையை சகிச்சுக் கொள்ள முடியல.. விஜய் சேதுபதி ஓபன்டாக்.!

Published

on

சில போட்டியாளர்களின் நடத்தையை சகிச்சுக் கொள்ள முடியல.. விஜய் சேதுபதி ஓபன்டாக்.!

ரசிகர்களுக்குள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் சீசன் 9, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நடுவராக பிரபல நடிகர் விஜய் சேதுபதி இருக்கிறார் என்பதாலேயே ரசிகர்கள் இடையே உற்சாகம் காணப்படுகின்றது.தற்பொழுது, பிக்பாஸ் சீசன் 9 இன் அதிகாரபூர்வ promo வெளியாகியுள்ளது. இதன் மூலம், நிகழ்ச்சியின், பரபரப்பான காட்சிகள், போட்டியாளர்களின் நடத்தை மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் அணுகுமுறை என்பன வெளியாகியுள்ளன.promo-வில், விஜய் சேதுபதி போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும், அதைப் பற்றிய அவருடைய எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். “வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்… இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரி தன்னும் இருக்கணும்.. ஆனா இங்க சில பேர் நடந்து கொள்ளுறது சகிக்க முடியவில்லை. இதெல்லாம் அவங்க தெரியாமல் எல்லாம் பண்ணல… தெரிஞ்சே தான் செய்யுறாங்க. ஆனா, சகிக்கிற அளவுக்கு இல்ல என்றதை அவங்களுக்கு சொல்லணும் எல்லோ… வாங்க பேசுவம்,” என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.இந்தக் கருத்து மூலம், விஜய் சேதுபதி நிகழ்ச்சியை அதிக உற்சாகத்துடனும் நேர்த்தியான முறையிலும் நடத்த உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் போட்டியாளர்களின் நடத்தை மற்றும் அணுகுமுறைகளை கவனித்து, அவர்களை வழிநடத்துவார் என்பது இந்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version