இலங்கை

சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு ; 24 மணிநேரத்திற்கு எச்சரிக்கை

Published

on

சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு ; 24 மணிநேரத்திற்கு எச்சரிக்கை

 வங்காள விரிகுடா கடல் பகுதி மற்றும் நாட்டின் கிழக்கு ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை 12.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு இது செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Advertisement

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (26) க்குள் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஞாயிற்றுக்கிழமை (27) காலை தென்மேற்கு மற்றும் அதை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதன் காணரமாக 05N-15N மற்றும் 80E-95E எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்த கடல் பகுதிகளில் செயல்படும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேவேளை, காங்கேசன்துறை முதல் திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் என்றும் கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version