இலங்கை
பருத்தித்துறை மரக்கறி சந்தையை மாற்றுமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்!
பருத்தித்துறை மரக்கறி சந்தையை மாற்றுமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்!
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றுமாறுகோரி பருதித்துறை வர்த்தக சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பருத்தித்துறை நகரிலிருந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஆரம்பமான குறித்த பேரணி நகரசபையைச் சென்றடைந்தது. இதில் சுமார் 200 வர்த்தகர்கள் இணைந்திருந்தமை குரிப்பிடத்தக்கது.