இந்தியா

புதுச்சேரி நகர பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை: சுயேச்சை எம்.எல்ஏ தலைமையில் உள்ளாட்சித்துறை தலைமை அலுவலம் முற்றுகை

Published

on

புதுச்சேரி நகர பகுதிகளில் குப்பைகள் அகற்றவில்லை: சுயேச்சை எம்.எல்ஏ தலைமையில் உள்ளாட்சித்துறை தலைமை அலுவலம் முற்றுகை

புதுச்சேரி நகரப் பகுதிகளில் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை முதல் குப்பைகள் சரிவர அகற்றப்படாததைக் கண்டித்து, உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) நேரு, பொதுமக்களுடன் இணைந்து உள்ளாட்சித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்.உருளையன்பேட்டை தொகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், குப்பைகள் அகற்றப்படாததைக் கண்டித்து எம்.எல்.ஏ. நேரு உள்ளாட்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு பொதுமக்களுடன் தரைவிரிப்பில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, பொதுமக்கள் உடனடியாகக் குப்பைகளை அகற்றக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இறுதியில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாகக் குப்பைகளை அகற்றுவதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version