இலங்கை
மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி பல வீடுகள் முற்றாக சேதம்!
மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி பல வீடுகள் முற்றாக சேதம்!
மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன இதனால் பல இடங்களில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.
பருவ மழை ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென வீசிய மினி சூறாவளியால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மழையுடனான வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வரும் 27ஆம் தேதி புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு 25.10.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை