இலங்கை

முறைகேடான சொத்துக்குவிப்பு; எட்டுப் பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

Published

on

முறைகேடான சொத்துக்குவிப்பு; எட்டுப் பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு சட்டவிரோதமாகவும், முறைகேடாகவும் சொத்துச் சேர்த்தனரா என்ற சந்தேகத்தில் எட்டுப்பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தப்பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே, குறித்த எட்டுப் பேருக்கும் எதிரான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த எட்டுப்பேரில் மூவருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்திலும், ஐவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டும், ஏழு பேருக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. 

Advertisement

வன்முறைகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்கள், வன்முறைகளை ஒழுங்கமைத்தவர்களுக்கு எதிராக எதிர்வரும் நாள்களில் சிறப்புப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version