இலங்கை
யாழில் பொலிஸாரின் அதிரடி சோதனையில் சிக்கிய கும்பல் ; பெரும் ஆபத்தான பொருட்கள் மீட்பு
யாழில் பொலிஸாரின் அதிரடி சோதனையில் சிக்கிய கும்பல் ; பெரும் ஆபத்தான பொருட்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேற்றைய திடீர் சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஒரு சந்தேகநபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும், ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.