சினிமா

ரசிகர்கள் காத்திருந்த moment வந்துவிட்டது.. அதிரடியாக வெளியானது “அகண்டா-2 தாண்டவம்” டீசர்!

Published

on

ரசிகர்கள் காத்திருந்த moment வந்துவிட்டது.. அதிரடியாக வெளியானது “அகண்டா-2 தாண்டவம்” டீசர்!

தெலுங்கு திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா மீண்டும் தனது அதிரடியான அவதாரத்தில் ரசிகர்களை மிரளச் செய்ய வருகிறார். போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகும் “அகண்டா-2: தாண்டவம்” திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி, இணையதளத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது.“அகண்டா” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் உருவாகும் இந்த தொடர்ச்சி, ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.2021 ஆம் ஆண்டில் வெளியான அகண்டா படம், தெலுங்கு சினிமாவின் சின்னமாக மாறியது. போயபட்டி ஸ்ரீனுவின் பவர்-பேக் இயக்கம், பாலகிருஷ்ணாவின் தீவிரமான நடிப்பு, தமனின் அதிரடி பிஜிஎம் இவை மூன்றும் சேர்ந்தே அந்த படத்தை பிளாக்பஸ்டர் வெற்றியாக்கின. அந்த படத்தில் ‘அகண்டா’ எனும் அதீத சக்தி கொண்ட கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது.அதேபோல “அகண்டா-2: தாண்டவம்” படம் அந்த கதையின் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது. இதன் மூலம் அகண்டா கதாபாத்திரம் இன்னும் வலிமையான வடிவில் திரைக்கு வருவதாக இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு தெரிவித்துள்ளார்.இன்று வெளியான டீசர் வெறும் 1 நிமிடம் 45 வினாடிகள் மட்டுமே இருந்தாலும், அதில் பாலகிருஷ்ணாவின் மாஸ் எனர்ஜி முழுமையாக காட்சியளிக்கிறது. தமன் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 2025 டிசம்பர் 5ம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version