உலகம்

வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்காவிடின் சீனா மீது கூடுதல் வரிவிதிப்பு; அமெ. ஜனாதிபதி எச்சரிக்கை!

Published

on

வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்காவிடின் சீனா மீது கூடுதல் வரிவிதிப்பு; அமெ. ஜனாதிபதி எச்சரிக்கை!

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவிக்காவிட்டால் அந்நாட்டுப் பொருள்கள் மீது 155 வீத வரிவிதிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவை அமெரிக்கா மிகுந்த மரியாதையுடன் நடத்தியது. ஆனால், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சீனா தொடர்ந்தால் அதனை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது.

Advertisement

சீன ஜனாதிபதி சி ஜின்பிங் அமெரிக்காவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா 155% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும். ஆண்டாண்டு காலமாக அமெரிக்காவை வர்த்தக ரீதியாக உலக நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய சகாப்தமெல்லாம் முடிந்துவிட்டது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீன ஜனாதிபதி சி ஜின் பிங்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது.விரைவில் நாங்கள் சந்திப்போம். அமெரிக்கா – சீனா இடையேயான வலுவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று நம்புகிறோம்- என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version