விளையாட்டு

IND vs AUS LIVE Score, 3rd ODI: ‘ஒயிட்-வாஷை’ தவிர்க்குமா இந்தியா? ஆஸி.,-யுடன் இன்று மோதல்

Published

on

IND vs AUS LIVE Score, 3rd ODI: ‘ஒயிட்-வாஷை’ தவிர்க்குமா இந்தியா? ஆஸி.,-யுடன் இன்று மோதல்

India vs Australia 3rd ODI Live Score: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெர்த்தில் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன் மூலம் அந்த அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் (இந்திய நேரப்படி) இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் தொடங்கி நடக்கிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையே இதுவரை 15 நேரடி ஒருநாள் தொடர்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒன்றில் கூட இந்தியா தொடரை முழுமையாக தாரைவார்த்ததில்லை. எனவே, ஆறுதல் வெற்றி பெற்று அந்த பெருமையை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளுமா? என்பதே ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது. அதே சமயம், முதல் இரு ஆட்டங்களில் வாகை சூடிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 3-0 என்ற கணக்கில் ‘ஒயிட் வாஷ்’ செய்து வரலாறு படைக்க வரிந்து கட்டும். ஆதலால் இரு அணி மோதும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சிட்னி மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் ராசியானது. இங்கு இந்தியாவுக்கு எதிராக 19 ஆட்டங்களில் மோதி அதில் 16-ல் வெற்றி கண்டுள்ளது. 2-ல் மட்டுமே (2008 மற்றும் 2016-ம் ஆண்டு) தோற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version