பொழுதுபோக்கு
இசைக்காக தியாகம் செய்தவர், தயிர் கூட சாப்பிட விடமாட்டார்: யேசுதாஸ் பற்றி பிரபல பாடகி ஓபன் டாக்!
இசைக்காக தியாகம் செய்தவர், தயிர் கூட சாப்பிட விடமாட்டார்: யேசுதாஸ் பற்றி பிரபல பாடகி ஓபன் டாக்!
1960களில் மலையாளத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகத் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் யேசுதாஸ். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளிலும், அராபிய மொழி, இலத்தீன், உருசிய மொழி, ஆங்கிலம் உள்ளிட்ட சில வெளிநாட்டு மொழிகளிலும் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்படப் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை (National Film Award for Best Male Playback Singer) ஏழு முறை வென்றுள்ளார். இது வேறு எந்தப் பாடகரும் அடையாத சாதனையாகும்.கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநில அரசுகளின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதுகளை 45 முறைக்கு மேல் பெற்றுள்ளார். ஒரு நாளில் நான்கு தென் இந்திய மொழிகளில் 16 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார் யேசுதாஸ்.இந்நிலையில், பிரபல பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ரா, தனக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்த பாடகர் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ் குறித்து பேசி உள்ளார். இசைக்காகவும், தனது குரல் வளத்திற்காகவும் யேசுதாஸ் எப்படித் தியாகம் செய்தார், எவ்வளவு கண்டிப்புடன் இருந்தார் என்ற சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.”நான் சின்ன வயதில் இருந்தே யேசுதாஸ் அவர்களின் ட்ரூப் (Troupe) நிகழ்ச்சிகளில் பாடி வந்தேன். அவர் எனக்கு குருநாதர் போல. அப்போதில் இருந்தே என்னிடம், ‘வாய்ஸை எப்படிப் பாதுகாப்பது, குரல் வளத்தை எப்படிப் பராமரிப்பது’ என்று பல நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பார்” என்று சித்ரா நினைவு கூர்ந்தார்.யேசுதாஸ் தனது குரல் வளத்தைப் பாதுகாப்பதில் மிகவும் கண்டிப்புடன் (Strict) இருந்ததாக சித்ரா குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, அவர் ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களைச் சாப்பிட விடமாட்டார். அதேபோல, அவர் தயிர் (Curd) கூடச் சாப்பிட விடமாட்டார். வாய்ஸைப் பாதுகாப்பது குறித்து நிறைய ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் (Restrictions) சொல்வார்” என்று சித்ரா கூறியுள்ளார். இந்தத் தியாக உணர்வும், கடுமையான கட்டுப்பாடுகளும்தான் யேசுதாஸின் மென்மையான மற்றும் தேன் போன்ற குரலுக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் என்று சித்ரா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.