தொழில்நுட்பம்

இனி உங்களை கண்காணிக்க முடியாது.. டிஜிட்டல் ஃபுட் பிரிண்ட்-ஐ நீக்குவது எப்படி? 5 ஸ்டெப்ஸ்!

Published

on

இனி உங்களை கண்காணிக்க முடியாது.. டிஜிட்டல் ஃபுட் பிரிண்ட்-ஐ நீக்குவது எப்படி? 5 ஸ்டெப்ஸ்!

நாம் ஒவ்வொருவரும் இணையத்தில் ஏதாவது ஒன்றை தேடும்போதும், ப்ரௌசிங் செய்யும்போதும், அதனை கிளிக் செய்யும்போதும் உருவாகும் தனிப்பட்ட டேட்டா தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், நிரந்தரமாக ஆஃப்லைனுக்குச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் பலரின் மனதிலும் எழுகிறது. ஆனால், மீண்டும் ஆன்லைனில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க முடியும் என்று எக்ஸ் (X) பயனர் ஒருவர் காட்டியுள்ளார்.பிரபல ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பக் கணக்கான Patrick’s AIBuzzNews அண்மையில், “எனது முழு டிஜிட்டல் தடயத்தையும் நான் அழித்துவிட்டேன். நீங்களும் செய்யலாம். நான் எப்படிச் செய்தேன் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்” (I deleted my entire digital footprint. You can too. Here’s how I did it) என்ற தலைப்பில் வைரல் பதிவைப் (Viral Thread) பகிர்ந்தது. இப்பதிவு இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இணையத்தில் ஒருவரது இருப்பை எளிமையான வழிமுறைகள் மூலம் எவ்வாறு முழுமையாக நீக்கலாம் என்பதை இந்தப் பதிவு தெளிவாக விளக்குகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்தப் பதிவின் மிக முக்கியமான ஸ்டெப் உங்களது கூகுள் செயல்பாடுகளை அழிப்பதுடன் தொடங்குகிறது. பயனர்கள் முதலில் myactivity.google. com என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது கூகுள் அக்கவுண்ட்டில் உள்நுழைய வேண்டும்.உள்நுழைந்ததும், கூகுள் மேப்ஸ் தேடல்கள் முதல் யூடியூப் வீடியோக்கள் மற்றும் படத் தேடல்கள் வரை கூகுள் சேவைகள் முழுவதும் நீங்க எடுத்த ஒவ்வொரு செயலும் அங்கே பட்டியலிடப்பட்டிருக்கும். இந்த டேட்டாவை அகற்ற, மேல் இடது மூலையில் உள்ள ‘Delete activity by’ (செயல்பாடுகளை அழி) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில், ‘Last Hour’, ‘Last Day’, ‘All Time’, மற்றும் ‘Custom Range’ (கடைசி ஒரு மணிநேரம், கடைசி நாள், எல்லா நேரமும், குறிப்பிட்ட வரம்பு) போன்ற விருப்பங்களைக் கொண்ட ‘Delete Activity’ என்ற பெட்டி திறக்கும்.’All Time’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்க பயன்படுத்திய கூகுள் தயாரிப்புகளின் பட்டியலைத் தேர்வு செய்து நீக்கலாம். அதேபோல், ‘Custom Range’ மூலம், எந்தெந்தத் தேதிகளில் உள்ள செயல்பாடுகளை நீக்க வேண்டும் என்பதைப் பயனர்கள் தேர்வு செய்யலாம். நீக்குவதை உறுதி செய்வதற்கு முன், மேப்ஸ், சர்ச் அல்லது யூடியூப் போன்ற கூகுள் தயாரிப்புகளால் ஒவ்வொன்றையும் நீக்க முடியும். போன் முழுவதும் உங்களது டிஜிட்டல் தடயங்களை அழிப்பதற்கான அடித்தளம் இதுதான்.உண்மையாகவே இணையத்தில் மறைந்துபோக, உங்களது ப்ரௌசிங் மற்றும் தேடல் வரலாறு சேமிக்கப்படுவதை நீங்க நிறுத்த வேண்டும் என்று அந்த எக்ஸ் பயனர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு, மேல் இடது மூலையில் உள்ள Activity Control (செயல்பாடு கட்டுப்பாடு) பகுதிக்குச் சென்று, Web and App Activity (வலை மற்றும் செயலி செயல்பாடு), Location History (இருப்பிட வரலாறு), YouTube History (யூடியூப் வரலாறு) ஆகியவற்றை நிறுத்த வேண்டும். இது, எதிர்காலத்தில் ஒரு பயனரின் செயல்பாடுகளை கூகுள் கண்காணிப்பதைத் தடுக்கும், அவர்களை அதன் சூழலியல் அமைப்பில் “கண்ணுக்குத் தெரியாதவராக” வைத்திருக்கும். இந்த ஸ்டெப் வெறும் ‘ஒரு விருப்பம் தள்ளி’ இருப்பதாகக் கூறப்பட்டாலும், இது ஒரு சக்திவாய்ந்த தீர்வாகும். இது நிறுத்தப்பட்டவுடன், ஒரு பயனர் எங்கு செல்கிறார், எதைத் தேடுகிறார், எதைப் பார்க்கிறார் என்பதை கூகுள் கண்காணிப்பதை நிறுத்துகிறது.பழைய டேட்டாவை நீக்கிய பிறகு, புதிய டேட்டா சேகரிக்கப்படுவதைத் திறம்படத் தடுக்க வேண்டும். செயல்பாடு கண்காணிப்பை மொத்தமாக முடக்குவதற்கு, கூகுள் அக்கவுண்ட் செட்டிங் சென்று, பின்னர் Data & Privacy (தரவு மற்றும் தனியுரிமை) பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே, அனைத்துச் செயல்பாடு கண்காணிப்பு விருப்பங்களையும் Toggle Off (முடக்க) செய்ய வேண்டும். இது, உங்க இணைய மற்றும் ஆஃப் பயன்பாடு, இருப்பிடத் தரவு மற்றும் யூடியூப் வரலாறு ஆகியவை பின்னணியில் பதிவு செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்யும்.ஒவ்வொரு சில மாதங்களுக்கும் இந்த ஸ்டெப்ஸ் மீண்டும் செய்ய வேண்டுமா என்று நீங்க கவலைப்படத் தேவையில்லை. நீங்க எளிதாக தானாக நீக்கும் (Auto-deletion) அம்சத்தை அமைக்கலாம். myactivity.google.com/auto-delete என்ற தளத்திற்குச் சென்று, Web & App Activity, Timeline, மற்றும் YouTube History ஆகியவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்க வகையைத் தேர்ந்தெடுத்த பிறகு, Auto-delete விருப்பத்தைக் கிளிக் செய்வதன் மூலம், 3, 18 அல்லது 36 மாதங்களுக்குப் பழமையான செயல்பாட்டைத் தானாகவே நீக்குமாறு தேர்வு செய்யலாம். இந்த ஸ்டெப் நீங்க செய்யாமலேயே உங்களது கணக்கைத் தொடர்ந்து சுத்தமாக வைத்திருக்க உதவும். இதுவே ‘தனியுரிமையை தானியங்குபடுத்துதல்’ என்று அழைக்கப்படுகிறது.உங்களது கணக்கு சுத்தமாக இருப்பது மட்டும் போதாது, உங்களது இணைய இணைப்பு தனியுரிமையுடன் இருக்க வேண்டும் என்று Patrick கூறுகிறார். இதற்கு அவர், விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கையும் (VPN), தனியுரிமையில் கவனம் செலுத்தும் பிரவுசர் அல்லது தேடுபொறியையும் (Search Engine) இணைத்துப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்.வி.பி.என்.-உடன், DuckDuckGo, Brave Search அல்லது Startpage போன்ற தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் தேடுபொறிகளை பயன்படுத்தலாம். தனியுரிமையில் கவனம் செலுத்தும் பிரவுசர்களில், DuckDuckGo, Tor Browser, மற்றும் Firefox (தனியுரிமை அமைப்புகளைச் செயல்படுத்திய பிறகு) ஆகியவை அடங்கும். இவை தவிர, 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை உங்களது கடவுச்சொற்களை (Passwords) மாற்றுவதும் புத்திசாலித்தனம். இது அடிப்படை நடவடிக்கையாகத் தோன்றினாலும், ஹேக்கர்களுக்கு எதிரான முக்கியமான பாதுகாப்பாகும்.உங்களது டிஜிட்டல் தடயத்தை அழிப்பது என்பது வெறும் ‘இணையத்தை விட்டு வெளியேறுவது’ மட்டுமல்ல; அது உங்களது கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதுதான். பல ஆண்டுகால டேட்டா நீக்குவது ஓர் ஆசுவாசம் அளித்தாலும், அதற்குப் பிறகு தனியுரிமையைத் தக்கவைத்துக் கொள்வதுதான் உண்மையான சவால்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version