இலங்கை

உலகில் யாரும் செய்யாததை சாதித்த ஜனாதிபதி அநுர!

Published

on

உலகில் யாரும் செய்யாததை சாதித்த ஜனாதிபதி அநுர!

தனது நாட்டில் மட்டுமல்லாது உலகிலும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் ஒரே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

Advertisement

நமது நாடு ஒரு தேசிய சக்தியாக சுத்திகரிக்கப்பட்டு மக்களின் தேசிய பாதுகாப்பு நிறுவப்பட்டு வருகின்றது. இவ்வாறிருக்க, கடந்த காலங்களாக  பாதாள குழுக்களில் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் அடிப்படையிலேயே வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கு  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முயற்சி எடுத்து வருகின்றார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகள் காரணமாக, ”வெளிநாடுகளுக்கு தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர்” என அவர் மேலும்  தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version