சினிமா
தன்னை ஒதுக்கிவிட்டார்கள்-னு புலம்பிய நடிகை!! இப்போ ரூ. 40 கோடி சம்பளம், 1000 கோடி சொத்து..
தன்னை ஒதுக்கிவிட்டார்கள்-னு புலம்பிய நடிகை!! இப்போ ரூ. 40 கோடி சம்பளம், 1000 கோடி சொத்து..
இந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை என்ற பெருமையை பெற்ற பிரியங்கா சோப்ரா, பாலிவுட் தன்னை ஒதுக்கியதாக கூறி வேதனைப்பட்ட தருணம் இருக்கிறது.பாலிவுட்டில் அரசியல் அதிகமாகிவிட்டது, சிலர் எனக்கு வாய்ப்புகள் வராமல் தடுப்பதாகவும் அவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அதனால் தான் பாலிவுட்டை விட்டு வெளியேறியதாக பிரியங்கா தெரிவித்திருந்தார்.பிரபல இதழ்களில் பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி சம்பளம் பெற்றுள்ளார். தற்போது ஹாலிவுட்டில் கவனம் செலுத்தும் பிரியங்கா, ராஜமெளலி இயக்கும் பான் – வேர்ல்ட் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் பிரியங்கா நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ரூ. 35 கோடி சம்பளம் வரை பெறுவதாக தகவல்.நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகள் பெற்றெடுத்த பிரியங்காவின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 1000 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.