இலங்கை

பணப்பையை தவறவிட்ட பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published

on

பணப்பையை தவறவிட்ட பிரித்தானிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட  பணப்பையை மீண்டும் அவரிடம் பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கையளித்துள்ளார்.

கொழும்பு – நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது.அந்தப் பணப்பை திம்பிரிகஸ்யாய வீதியில் விழுந்து கிடந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பெண் பொலிஸ் பரிசோதகர் யமுனா தம்மிகா குமாரி எதிரிசிங்க மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் சமன்மீ ஆகிய இருவரும்  கண்டெடுத்துள்ளனர். 

Advertisement

அதனைத் தொடர்ந்து, பணப்பையின் உரிமையாளரான வெளிநாட்டுப் பெண்மணியை பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு அழைத்து, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுமித்ர டி சில்வா அந்தப் பணப்பையை அவரிடம் ஒப்படைத்தார்.  அதில் இலங்கை நாணயம் 6,000 ரூபாயும், இலங்கை நாணயத்தில் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான யூரோ, அமெரிக்க டொலர், ஸ்டெர்லிங் பவுண்ட் போன்ற வெளிநாட்டு நாணயங்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version