பொழுதுபோக்கு
பிடிக்காத பாடல் வரிகள்: கோபமாக போன எம்.ஜி.ஆர், திரும்பி வந்து மகிழ்ச்சியாக ஆடிய பாட்டு: இது சூப்பர் ஹிட்டு
பிடிக்காத பாடல் வரிகள்: கோபமாக போன எம்.ஜி.ஆர், திரும்பி வந்து மகிழ்ச்சியாக ஆடிய பாட்டு: இது சூப்பர் ஹிட்டு
தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை பெற்ற முன்னணி நடிகராகவும், அரசியலில் தொடர்ந்து 3 முறை முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆர் ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆட வந்துவிட்டு, கோபத்தில் ஸ்டுர்டியோவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு எம்.எஸ்.வி ஆரூர் தாஸ் உள்ளிட்ட பலர் வந்து சொன்னவுடன் மீண்டும் மகிழ்ச்சியாக படப்பிடிப்பில் கலந்தகொண்டுள்ளார். அவர் கோப்ப்படும் அளவுக்கு அங்கு என்ன நடந்த்து தெரியுமா?தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில், கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.இந்த படத்தில் வரும் நாடோடி நாடோடி என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலின் முதல் பாதியில் தனது கல்லூரி நண்பர்களை வைத்துக்கொண்டு சரோஜா தேவி எம்.ஜி.ஆரை கிண்டல் செய்து பாடுவார். அதன்பிறகு பாடலின் 2-ம் பாதியில் எம்.ஜி.ஆர் தனது நடனம் மற்றும் பாடல்கள் மூலம் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பாடல் அமைந்திருக்கும். இந்த பாடலில் பல வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுவது போல் காட்டியிருப்பார் இயக்குனர்.இந்த பாடல் காட்சி ஷூட்டிங்கிற்காக ரிகர்சல் நடந்தபோது அதை பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் திடீரென ஸ்டூடியோவை விட்டு வேகமாக வெளியேறியுள்ளார். அப்போது அவரின் உதவியாளர் வந்து ஸ்டூடியோ மேனேஜரிடம் ஏதோ கூறியுள்ளார். அடுத்த 5 நிமிடங்களில் எம்.எஸ்.வி மற்றும் ஆரூர் தாஸ் இருவரும் ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்கு வந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மூவரும் சிரித்துக்கொண்டு அறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். அதன்பிறகு எம்.ஜி.ஆா ஸ்டூடியோவுக்கு சென்று அந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அப்போது ஆரூர் தாஸ் ஏ.வி.எம்.குமரனை தனியாக அழைத்து, இந்த பாடலில் நாடோடி ஓடோடி என்று வருகிறது. அந்த வார்த்தை அவருக்கு பிடிக்கவில்லை. அதன்பிறகு, உங்களை விரட்ட அவர்கள் பாடுகிறார்கள். இறுதியில் அவர்களுக்கு நீங்கள் பதில் கொடுத்து புலி வேஷம் போட்டு ஆடுவீர்கள் என்று சொன்னோம் எம்.எஸ்.வியும் அதையே சொல்ல அதன்பிறகு எம்.ஜி.ஆர் சமாதானமாகி இதில் நடித்துள்ளார். இதை ஏ.வி.எம்.குமரனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.