இலங்கை
புகையிரத கடவை அருகே வீதி விளக்கு செயல் இழப்பு ; அசௌகரியங்களை எதிர்நோக்கும் பாதசாரிகள்
புகையிரத கடவை அருகே வீதி விளக்கு செயல் இழப்பு ; அசௌகரியங்களை எதிர்நோக்கும் பாதசாரிகள்
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிராஜ் நகர் பிரதான வீதியில் இருந்து உட்செல்லுப் புகையிரத வண்டி கடவையின் வீதிக்கு அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மின் குமிழ் பல நாட்களாக செயழிலந்துள்ளது.
இதன் காரணமாக இரவு நேர புகையிர வண்டி பயணம் செய்யும் போது குறித்த கடவையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திடீர் விபத்து சம்பவங்கள் ஏற்படலாம்.
எனவே குறித்த மின் கடவை பகுதியின் அருகாமையில் உள்ள தெரு விளக்கை சீர் செய்து பாதுகாப்பனதாக அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.