சினிமா
பெண்களின் மனதைக் குளிரவைத்த பாலா.. “காந்தி கண்ணாடி” வெற்றியை இப்படியும் கொண்டாடலாமா?
பெண்களின் மனதைக் குளிரவைத்த பாலா.. “காந்தி கண்ணாடி” வெற்றியை இப்படியும் கொண்டாடலாமா?
தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சித் துறையிலும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கும் நகைச்சுவை நடிகர் KPY பாலா, இன்று தனது சமூகப் பொறுப்பான செயலால் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.அவரின் சமீபத்திய திரைப்படமான “காந்தி கண்ணாடி” வெற்றிகரமாக 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு, KPY பாலா சமூக ஊடகங்களில் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.அதன்போது அவர், “இன்னைக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கன். காரணம் என்னுடைய நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி படத்தின் 50வது நாள் இன்று.இந்தப் படத்தில் இருந்து வாங்கிய சம்பளம் மூலமாக, என் குடும்பமாக இருக்கிற 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இந்த மாசத்துக்கான due-வை கொடுக்கலாம் என்று நினைத்தேன். இப்போ அதை செய்து முடிச்சிருக்கேன்.” என்று கூறியுள்ளார். அவரது இந்த மனம் கவரும் செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பலரும், “இன்றைய தலைமுறைக்கான உண்மையான role model” என்று புகழ்ந்து வருகிறார்கள்.“காந்தி கண்ணாடி” திரைப்படம், நகைச்சுவையுடன் சமூகச் செய்தியையும் சேர்த்து சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் KPY பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி சிறிது காலத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.