இலங்கை

பொலிஸாரால் பல முறை பாலியல் துன்புறுத்தல் ; உயிர்மாய்த்த இளம் பெண் வைத்தியர், கையில் இருந்த குறிப்பால் வெடித்த சர்ச்சை

Published

on

பொலிஸாரால் பல முறை பாலியல் துன்புறுத்தல் ; உயிர்மாய்த்த இளம் பெண் வைத்தியர், கையில் இருந்த குறிப்பால் வெடித்த சர்ச்சை

இந்தியாவின் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது மரணத்திற்கான காரணத்தை விவரிக்கும் ஒரு குறிப்பை அந்த பெண் வைத்தியர் தனது கையில் எழுதியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

அதில், இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களாக ஒரு பொலிஸ் அதிகாரி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், மற்றொரு அதிகாரி தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து உயிரிழந்த பெண் வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்த போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

குற்றவாளிகள் தப்பியோட்டம்
இந்த நிலையில், குறித்த வைத்தியரின் உயிரிழப்பை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்படி, தற்போது இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதகாவும் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version