சினிமா

வெடிக்கும் பஞ்சாயத்து.. மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சுனிதா என்ன சொன்னார் தெரியுமா?

Published

on

வெடிக்கும் பஞ்சாயத்து.. மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சுனிதா என்ன சொன்னார் தெரியுமா?

மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் நடித்தவர். சினிமாவில் வெற்றியை காண முடியவில்லை என்றாலும் தனக்கு தெரிந்த சமையல் தொழிலை கையில் எடுத்து அதில் மிக விரைவிலேயே வெற்றியையும் கண்டவர்.சமையல் தொழில் அதிக கவனம் செலுத்தியவர், எந்த ஒரு பிரபலத்தின் நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எடுத்தாலும் அதில் இவரது சமையல் தான் அதிகம் இருந்தது.சமையல் தொழிலில் பிஸியாக இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மிகவும் பேமஸ் ஆனார். ஆனால் தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பேசும் பொருளாக உள்ளது.தொடர்ந்து, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், மாதம்பட்டி குறித்து நடன அழகி சுனிதா பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” நான் இப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தயாரிப்பில் மிஸ் மேகி என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அவர் ரொம்பவே ஸ்வீட்டானவர். எனக்கு தெரிந்து மீடியாவில் வேலை செய்யும் ஆட்களிலேயே ரங்கராஜ்தான் மிகவும் ஜென்யூனான ஆள்” என்று தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version