சினிமா
வெளியானது “காதல் Reset Repeat” படத்தின் டீசர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
வெளியானது “காதல் Reset Repeat” படத்தின் டீசர்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லல், அழகிய காட்சியமைப்பு மற்றும் உணர்ச்சிகரமான கதைகளை உருவாக்கும் திறமையான இயக்குநராக விளங்கும் ஏ. எல். விஜய், தற்போது தனது புதிய படைப்பு “காதல் Reset Repeat” மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.தற்பொழுது இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.படத்தின் பெயர் போலவே, “காதல் Reset Repeat” ஒரு ரொமான்டிக் – காமெடி – திரில்லர் கலவையுடன் கூடிய கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், மற்றும் மூத்த நடிகர் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.ஏ. எல். விஜய்யின் படங்கள் பெரும்பாலும் உணர்ச்சி மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை அவர் சிறிது வித்தியாசமாக சிந்தித்துள்ளார். டீசரில் காணப்படும் காட்சிகளும், கதை அமைப்பும் இதனை உறுதிப்படுத்துகின்றன.“காதல் Reset Repeat” டைட்டில் டீசர், சாதாரண டீசராக அல்லாமல் சினிமாவே ஒரு காமெடி திரில்லர் என்பதை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.promoவில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்தி வைத்து, அவரிடம் பாடல் இசையமைக்க கேட்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.