இந்தியா

அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: சூர்யகாந்த்தை பரிந்துரை செய்த பி.ஆர்.கவாய்

Published

on

அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: சூர்யகாந்த்தை பரிந்துரை செய்த பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த மே 14-ஆம் தேதி பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாய்-க்கு மத்திய அரசு கடிதம் கடந்த 23-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது.அதாவது, தலைமை நீதிபதி ஒருவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பொழுது அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்து கடிதம் எழுதுவது மரபாக உள்ளது. இதையடுத்து, தனக்கு அடுத்தப்படியாக நீதிபதி சூர்யகாந்தை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய சட்டத்துறைக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைக் கடிதம் எழுதியுள்ளார். சூர்யகாந்த் தலைமை நீதிபதியாக மத்திய சட்டத்துறை அறிவித்துவிட்டால், அவர் உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்படுவார். கடந்த 2019-ம் ஆண்டு மே 24-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி சூர்யகாந்த், தலைமை நீதிபதியாக 14 மாதங்கள் பதவி வகிக்கும் நிலையில் அவர் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ஓய்வு பெறுவார்.யார் இந்த சூர்யகாந்த்?

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version