இலங்கை

இளம் பெண் சட்டத்தரணி கொலை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Published

on

இளம் பெண் சட்டத்தரணி கொலை ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

2024 ஆம் ஆண்டு மிரிஹானவில் உள்ள அவரது வீட்டில் 36 வயதுடைய பெண் சட்டத்தரணி கொல்லப்பட்ட வழக்கில் ஒரு வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாரதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (27) பிணை வழங்கியது.

வழக்கு விசாரணை மற்றும் பிரதிவாதிகள் இருவரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி , சந்தேகநபரை கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டார்.

Advertisement

அதன்படி, சந்தேகநபரை தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளுடன் ரூ. 500,000 ரொக்கப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

சந்தேகநபருக்கு பயணத் தடையையும் விதித்த நீதிமன்றம், நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் பிணை ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version