சினிமா

கவிஞர் சினேகனின் தந்தை 102 வயதில் காலமானார்.! துயர தகவலை இன்ஸ்டாவில் பகிர்ந்த சினேகன்

Published

on

கவிஞர் சினேகனின் தந்தை 102 வயதில் காலமானார்.! துயர தகவலை இன்ஸ்டாவில் பகிர்ந்த சினேகன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக சினேகன் காணப்படுகின்றார்.  இவர் எழுதிய ஆராரிராரோ என்ற ஒற்றை பாடல்  காலம் கடந்தும் அவரைக் கொண்டாட வைக்கும்.  ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இவர் பல பாடல்களை எழுதியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில்  ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை சினேகன் பிடித்தார்.  அதற்கு முன்பு பல படங்களில் பாடல்கள் எழுதி இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இந்த பாடல்கள் அனைத்துமே சிநேகன் எழுதியது என்று பலருக்கும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தன்னைவிட 16 வயது குறைந்த சீரியல் நடிகை கன்னிகாவை  காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் எட்டு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்ததாக கூறியுள்ளனர்.  இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில்,  சினேகரின் தந்தை  வயது மூப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.  அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 102 வயது என்பதோடு, தஞ்சை புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார்.   தற்போது அவருடைய மறைவுக்கு பலரும் தங்களுடைய அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version