இந்தியா

காஷ்மீரில் பாகிஸ்தானால் கொடூரமான அடக்குமுறை; இந்தியா குற்றச்சாட்டு!

Published

on

காஷ்மீரில் பாகிஸ்தானால் கொடூரமான அடக்குமுறை; இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் மிகவும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் விசேட அமர்வுகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதி ஹரிஸ், நேற்றைய அமர்வில் உரையாற்றியுள்ளார். இதன்போதே, பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படும் காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement

பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் இராணுவக்கெடுபிடிகள் நிறைந்துள்ளன. அங்குள்ள மக்கள் காஷ்மீரின் வளங்கள் சூறையாடப்படுவதை எதிர்ப்பதால், அவர்கள் இராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர். இந்த மனித உரிமை மீறல்களுக்குப் பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியப் பிரதிநிதி மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version