சினிமா
“கூலி” படத்தால் தலை கீழாக மாறிய லோகேஷின் வாழ்க்கை… கம்பேக் கொடுப்பாரா?
“கூலி” படத்தால் தலை கீழாக மாறிய லோகேஷின் வாழ்க்கை… கம்பேக் கொடுப்பாரா?
தமிழ் திரைப்பட உலகில் வெற்றி, தோல்வி எனும் இரு பக்கங்களும் எப்போது மாறும் என்பதை யாரும் கணிக்க முடியாது. இதற்குக் கிளாசிக் உதாரணமாக தற்போது பேசப்படும் பெயர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.ஒரு காலத்தில் ஹிட்டுக்காக ஏங்கியிருந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் லோகேஷை பிடித்துக்கொண்டு வந்தனர். ஆனால், அவர் சமீபத்தில் இயக்கிய ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெறாததால், தற்பொழுது சினிமா வட்டாரங்கள் அவரைத் தள்ளி வைப்பது போல நடந்துவருவதாக திரையுலக செய்திகள் தெரிவிக்கின்றன.2017ஆம் ஆண்டில் வெளிவந்த மாநகரம் படத்தின் மூலம் திரையுலகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற தொடர்ச்சியான வெற்றிப் படங்களால் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய இயக்குநராக உருவெடுத்தார்.முக்கியமாக கமல் ஹாசன் நடித்த விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகின. ஒவ்வொரு தயாரிப்பாளரும், முன்னணி நடிகரும் அவருடன் படம் செய்ய விரும்பினர். இதே வேளையில் லோகேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி படத்தை இயக்கியிருந்தார். 2025 ஆகஸ்ட் 14 அன்று உலகமெங்கும் வெளியான கூலி திரைப்படம் ஆரம்பத்தில் மிகுந்த ஹைப் பெற்றது. ரஜினியின் கேரக்டர், லோகேஷின் டைரக்ஷன், அனிருத் இசை என பல அம்சங்கள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு, விமர்சனங்கள் கலவையானதாக இருந்தன.ரசிகர்களிடையே ரஜினியின் கவர்ச்சி இருந்தாலும், கதை மற்றும் திரைக்கதை குறித்த கருத்துகள் எதிர்மறையாக அமைந்தன. இதனால், படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைந்தது. வெளியான முதல் வாரம் தாண்டியவுடன் பல திரையரங்குகளில் கூலி குறைந்த காட்சிகளாகவே ஓடியது. இதனால் லோகேஷின் மவுஸ் சற்று குறைந்துள்ளதாகவே தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.