பொழுதுபோக்கு
கேப்டனுக்கு ஜோடியாக 2 படங்கள்; 4 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த இந்த நடிகை யார்னு தெரியுதா?
கேப்டனுக்கு ஜோடியாக 2 படங்கள்; 4 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த இந்த நடிகை யார்னு தெரியுதா?
சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை எவ்வளவு தான் வெற்றிப்படங்களை கொடுத்தாலும், திருமணத்திற்கு பிறகு அவர்களை சினிமா ஒதுக்கிவிடும், அல்லது சினிமாவை விட்டு அவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். அந்த வகையில், 90-களில் கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை ஒருவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை ரவளி தான். 1990-ம் ஆண்டு வெளியான ஜச்மெண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 1992-ல் விஜயகுமார், கௌதமி இணைந்து நடித்த பட்டத்து ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிய ரவளி, 1995-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திருமூர்த்தி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.அதே ஆண்டு மீண்டும் விஜயகாந்துடன் இணைந்து காந்தி பிறந்த மண் என்ற படத்திலும் நடித்த ரவளி, சத்யராஜூவுடன் பெரிய மனுஷன், பார்த்திபனுடன் அபிமன்யூ, நெப்போலியனுடன் கரிசக்காட்டு பூவே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2006-ம் ஆண்டு 47 ஏ பெசன்ட் நகர் வரை என்ற படத்தில் நடித்திருந்தார். 2007-ம் ஆண்டு நீலிகிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து செய்துகொண்ட ரவளி கடைசியாக, மாயாகாடு என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என இந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், 1996-ம் ஆண்டு தெலுங்கில் நடித்த பெல்லி சண்டாடி என்ற படம் தான் தமிழில் விஜய் நடிப்பில் நினைத்தேன் வந்தாய் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில், ரவளி நடித்த கேரக்டரில் தான் தமிழில் தேவயானி நடித்திருந்தார். அரவிந்த் சாமியுடன் தேவராகம், படத்தில் நடித்திருந்த ரவளி, தமிழில் விஜய் நடிப்பில் வெளியானி பெரிய வெற்றியை பெற்றிருந்த பூவே உனக்காக படத்தின் தெலுங்கு ரீமேக்கில், சங்கீதா நடித்த கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் ஜெகபதிபாபு நாயகனாக நடித்திருந்தார். தமிழில் விஜயகாந்த், சத்யராஜ, தெலுங்கில் வெங்கடேஷ், பாலகிருஷ்ணனா, மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள நடிகை ரவளி, தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.