சினிமா

ஜாதியை எப்ப விடுறோமோ.. அப்ப தான் நாம மனுஷரா இருப்போம்.! நடிகை தீபா பகீர்.!

Published

on

ஜாதியை எப்ப விடுறோமோ.. அப்ப தான் நாம மனுஷரா இருப்போம்.! நடிகை தீபா பகீர்.!

தென்னிந்திய திரைப்பட உலகில் தைரியமான பேச்சு மூலம் அடிக்கடி பேசுபொருளாகி வருபவர் நடிகை தீபா. சமூக பிரச்சினைகள் குறித்த தன்னுடைய நேர்மையான கருத்துகளை வெளிப்படுத்துவதில் எப்போதும் தயங்காத இவர், சமீபத்தில் நடைபெற்ற “ஆறறிவு” திரைப்பட விழாவில் ஆற்றிய உரையால் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் தீபா கூறிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் தற்போது தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, ஜாதி, மனித நேயம், காதல் ஆகியவற்றைப் பற்றிய அவரின் கருத்துகள் பலரின் மனதையும் உருக்கியுள்ளன.விழாவில் உரையாற்றிய தீபா,“எனக்கு எந்த தலைவரும், எந்த ஜாதியும் முக்கியம் இல்ல. ஒருத்தர் மேல அன்பு வந்தால் அதை தப்புனு சொன்னா நீ தான் தப்பு. ஜாதி பெயரை சொல்லி ஒரு உயிரை எடுக்கிறது தப்பு. நீங்க எத்தனை கொடுமை செய்தாலும் காதல் எப்பவும் சாகாது…” என்று தெரிவித்திருந்தார். மேலும் அவர், ” ஜாதியை எப்ப நாம விடுறோமோ அப்ப தான் நாம மனுஷரா இருப்போம். அதுக்கு தான் ஜாதிக்கு எதிரான படங்கள் வந்திட்டே இருக்கு… அதை பார்த்தாவது திருந்தட்டும்…” எனவும் கூறியிருந்தார்.இவரின் வார்த்தைகள் நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் சற்றே மௌனமாக்கியது.  தீபாவின் இந்த உரை நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களுக்குள் சமூக வலைதளங்களில் பரவியது. இணையத்தில் பலர்  அவரின் உரையை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version