பொழுதுபோக்கு

தமிழுக்கு அவமானம், ஊமை விழிகள் படத்தில் சென்சார் சொன்ன முக்கிய ‘கட்’: படத்தின் ஒரே மைனஸ் இதுதான்!

Published

on

தமிழுக்கு அவமானம், ஊமை விழிகள் படத்தில் சென்சார் சொன்ன முக்கிய ‘கட்’: படத்தின் ஒரே மைனஸ் இதுதான்!

1986-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியான படம்தான் ஊமை விழிகள். விஜயகாந்த், கார்த்திக், சந்திரசேகர், அருண்பாண்டியன், ஜெய்சங்கர், சரிதா, ரவிச்சந்திரன், இளவரசி, ஸ்ரீவித்யா, விசு, கிஷ்மு, செந்தில், மலேஷியா வாசுதேவன் ஆகியோரின் கூட்டணியில் எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியது திரைப்பட கல்லூரி மாணவர்கள்தான்.அப்போது, திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றால் மதிக்கக்கூட மாட்டார்கள். ஏளன பேச்சு ஏராளமாக வந்துவிழும். ஆனால், அத்தனையும் இந்தப் படத்தின் மூலம் தலைகீழாக மாறியது. பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ், பாலுமகேந்திரா, டி. ராஜேந்தர் என பல ஜாம்பவான்களும் கொடி கட்டி பறந்த அந்த காலகட்டத்தில்,  இப்படம் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பெருமை சேர்த்தது. ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான சஸ்பென்ஸ் த்ரில்லரை தமிழ் திரைப்படத்தில் பார்த்து ரசிகர்கள் பரவசமடைந்தனர். ரவிச்சந்திரனின் வில்லத்தனம் மிரள வைத்தது மட்டுமல்லாமல் சினிமாவில் அவருக்கான ரீஎண்ட்ரியாகவும் அமைந்தது. ரிசார்டுக்கு வரும் இளம்பெண்கள், சந்தேகத்திற்கு இடமான முறையில் காணாமல் போகிறார்கள். இதனை விசாரிக்க வரும் பத்திரிக்கையாளர் சந்திரசேகர் கொல்லப்படுகிறார். இதனையறிந்த பத்திரிக்கை உரிமையாளர் ஜெய்சங்கர், காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகாந்த், பத்திரிகையாளர் அருண் பாண்டியன் ஆகியோர் இணைந்து கொலையாளியை கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை. இந்நிலையில், ‘ஊமைவிழிகள்’ திரைப்படம் குறித்து இயக்குநர் அரவிந்த்ராஜ் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “ஊமை விழிகள் படத்தை எடுத்து முடித்துவிட்டு பார்க்கும் பொழுது ஒரு லிங்க் தேவைப்பட்டது. அதாவது, சசிகலாவை கூட்டி வந்து மருத்துவமனையில் அனுமதித்துவிடுவார்கள். சசிகலா மருத்துவமனையில் இருக்கிறார் என்பது கேப்டனுக்கு தெரியும் சந்திர சேகர் போன் செய்து சொல்லிவிடுவார். வில்லனுக்கு எப்படி தெரிந்தது. அவன் தான் ஒரு ஆள் அனுப்புவான். சசிகலாவை கொல்வதற்கு பதிலாக சந்திர சேகரை கொன்றுவிடுவான். அந்த மாதிரி ஒரு டிராக் போகும். இந்த சீக்குவன்ஸிற்கு எப்படி போன் செய்து சொல்வது எனும் போது மருத்துவமனையில் ஒரு மருத்துவர் இருப்பார். வில்லனோட ஆள், அவர் சொன்னதாக லிங்கிற்காக ஒரு சீன் எடுத்தோம். அந்த சீனை சென்சாரில் கட் செய்ய சொன்னார்கள். அதை ஏன் கட் செய்ய வேண்டும் என்று கேட்ட போது மருத்துவமனை மேஜையில் இருக்கும் பெயரில் டாக்டர் தமிழ் மணி என்று இருக்கிறது. தமிழை நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள் என்று சொன்னார்கள். நான் வேறு போர்டு எதும் கிடைக்கவில்லை சார் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த ஒரு காட்சி போடவில்லை. சென்சார் போர்டு 16 காட்சிகளை கட் செய்யும்படி சொல்லி 8 காட்சிகளை கட் செய்ய சொன்னார்கள். அந்த காட்சிகள் படத்தில் இருந்து போனால் கூட படத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அந்த மாதிரி ஒரு 8 காட்சிகளை கட் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்தோம்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version