இலங்கை

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் ; ஜகத் விதான

Published

on

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் ; ஜகத் விதான

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய கூறியமைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அறிவித்துள்ளார்.

தமக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல, மாறாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடனான இவரது தொடர்பு காரணமாக ஏற்பட்டது என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.பிரியந்த வீரசூரிய அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்தக் கூற்று ஆதாரமற்றது மற்றும் தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான மறுத்துள்ளார்.

“எனக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நான் 1989 ஆம் ஆண்டு முதல் சட்டப்பூர்வமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை,” என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த வார ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தல் குறித்து தாம் கவலை தெரிவித்ததன் பின்னர், சபாநாயகரின் தலையீட்டின் மூலம் தனக்குக் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதில் பொலிஸ் மா அதிபர் கோபமடைந்துள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Advertisement

பொலிஸ் மா அதிபர், தம்மை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் பகைமையை உருவாக்க முயற்சிப்பதாகவும், இதன் மூலம் தமது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version