இலங்கை

போதைப்பொருளுக்கு எதிராக கடந்த 10 மாத காலத்தில் சுமார் 2 லட்சம் வழக்குகள்

Published

on

போதைப்பொருளுக்கு எதிராக கடந்த 10 மாத காலத்தில் சுமார் 2 லட்சம் வழக்குகள்

இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 22ஆம் திகதிவரையான சுமார் 10 மாத காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக நாட்டில் ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 672 வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் பாதுகாப்புப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 320 சுற்றிவளைப்புகளில், போதைப்பொருள் தொடர்பில் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 938 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 60 இலட்சத்து 19 ஆயிரத்து 343க்கும் அதிகமானவர்கள் சோதனையிடப்பட்டுள்ளனர். 

Advertisement

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வகைகளில் 2 ஆயிரத்து 539.5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் கைப்பற்றப்பட்டு, அவை தொடர்பாக 66 ஆயிரத்து 593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்து 482.8 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டு 58 ஆயிரத்து 130 வழக்குகளும், 14 ஆயிரத்து 434.4 கிலோகிராம் கஞ்சா மற் றும் கேரளக் கஞ்சா என்பன கைப்பற் றப்பட்டு 58 ஆயிரத்து 724 வழக்கு களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 32.6 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டு 91 வழக்குகளும், 30 இலட்சம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 808 வழக்குகளும், 575 கிலோகிராம் வேறு போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு ஆயிரத்து 474 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுற்றிவளைப்புகளில் ரி-56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்கள் உட்பட மொத்தமாக 2 ஆயிரத்து 97 துப்பாக்கிகள் பாதுகாப்புப் பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version