இலங்கை
மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த தந்தைக்கு இலங்கையில் நடந்த துயரம்
மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த தந்தைக்கு இலங்கையில் நடந்த துயரம்
இலங்கைக்குச் சுற்றுலா வந்த பிரித்தானியப் பிரஜை எல்லயில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனது மகளின் 34ஆவது பிறந்த நாளை கொண்டாட வந்ததாகத் தெரியவந்துள்ளது.
அவர் தனது மகளுடன் ஒக்டோபர் 16 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தார். பின்னர் இருவரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி எல்லவுக்குச் செல்வதற்கு முன்னர் மாத்தறை மாவட்டத்தில் உள்ள வெலிகமவுக்குச் சென்று, அங்கு உள்ளூர் சுற்றுலா விருந்தகத்தில் தங்கியதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி தந்தையும் மகளும் எல்ல மலையேற்றம் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மலை உச்சிக்கு சென்ற பின் குறித்த பிரித்தானியப் பிரஜை திடீரென சரிந்து வீழ்ந்ததாகவும், பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.