இலங்கை

முன்னாள் விமானப்படை அதிகாரியின் வீட்டுக்குள் சிக்கிய பொருட்களால் பரபரப்பு

Published

on

முன்னாள் விமானப்படை அதிகாரியின் வீட்டுக்குள் சிக்கிய பொருட்களால் பரபரப்பு

தொம்பே – நாகஹதெனிய பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று  (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் தொம்பே – நாகஹதெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சந்தேக நபரிடமிருந்து 196 கிலோகிராம் 218 கிராம் கேரள கஞ்சா மற்றும் 02 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தொம்பே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொம்பே, பலுகம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நபர்  இலங்கை விமானப்படை தளத்தில் பைலட் சார்ஜென்டாக பணியாற்றி 2022 ஜனவரியில் ஓய்வு பெற்றார் என்பது தெரியவந்துள்ளது

Advertisement

தொம்பே பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version