இலங்கை

வவுனியா-மன்னார் பிரதிபொலிஸ்மா அதிபர் மக்களை சந்திக்க ஏற்பாடு!

Published

on

வவுனியா-மன்னார் பிரதிபொலிஸ்மா அதிபர் மக்களை சந்திக்க ஏற்பாடு!

மாதத்தில் இரண்டு தடவை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வவுனியா – மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ தெரிவித்துள்ளார்.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குறைகளை இனங்கண்டு அதனை தீர்க்கும் பொருட்டு மாதத்தில் இரண்டு நாட்கள் ‘பொதுமக்கள் குறைதீர்’ நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதற்கமைவாக, வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் மாதத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து பொது மக்கள் தமது பிரச்சனைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version